லாரியில் ஆம்பூர் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆம்பூர் தனி வட்டாச்சியர் குமாருக்குரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிவட்டாச்சியர் தலைமையிலான அலுவலர்கள் திருப்பத்தூர் - வேலூர் மாவட்ட எல்லை சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வேலூரிலிருந்து ஆம்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த லாரி சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த அலுவலர்கள் லாரியை பின்தொடர்ந்து மாதனூர் அடுத்த குளித்திகை பகுதியில் மடக்கிப் பிடித்தனர்.