தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2 டன் ரேசன் அரிசி பறிமுதல் - வருவாய் துறையினரிடம் ஒப்படைப்பு - வருவாய் துறை அலுவலர்களிடம் ஒப்படைப்பு

வாணியம்பாடி அருகே மலைப்பகுதி வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு மினி லாரியில் கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி மூட்டைகளை பொதுமக்கள் பிடித்து வருவாய் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

ரேசன் அரிசி மூட்டைகள் ஒப்படைப்பு
ரேசன் அரிசி மூட்டைகள் ஒப்படைப்பு

By

Published : Jan 14, 2022, 6:46 AM IST

வாணியம்பாடி :திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து வெலதிகாமணிபெண்டா மலை சாலை வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு 2 டன் ரேசன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்ற மினி லாரியை பொதுமக்கள் நிறுத்தியுள்ளனர்.

லாரியை நிறுத்திய ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். உடனடியாக வாணியம்பாடி வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு சென்ற வட்டாட்சியர் மோகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தீபன் தலைமையிலான வருவாய் துறையினர் ரேசன் அரிசி மூட்டைளுடன் மினி லாரியை பறிமுதல் செய்து உணவு பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்தி சென்றவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரேசன் அரிசி மூட்டைகள் ஒப்படைப்பு

இதையும் படிங்க:சென்னையில் இளம்பெண் மருத்துவர் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details