முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் தண்டனை பெற்று வரும் முருகனுக்கு, இலங்கையில் உயிரிழந்த அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் காணொலி அழைப்பு மூலம் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தனது தாயுடனும் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள தனது மனைவி நளினியுடனும் காணொலி அழைப்பில் பேச அனுமதிக்ககோரி, கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.