தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

32 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறை பாதுகாப்பின்றி நண்பர்களுடன் தேநீர் அருந்திய பேரறிவாளன்

சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு பிணை கிடைத்த நிலையில், நேற்று (மார்ச் 15) நீண்ட நாள்கள் கழித்து காவலர்கள் பாதுகாப்பின்றி தன் நண்பர்களுடன் சுதந்திரமாக தேநீர் அருந்தி மகிழ்ந்தார்.

32 வருடங்களுக்கு பிறகு காவல்துறை பாதுகாப்பின்றி  நண்பர்களுடன் தேநீர் அருந்தும் பேரறிவாளன்
32 வருடங்களுக்கு பிறகு காவல்துறை பாதுகாப்பின்றி நண்பர்களுடன் தேநீர் அருந்தும் பேரறிவாளன்

By

Published : Mar 16, 2022, 11:10 PM IST

திருப்பத்தூர்:மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தனது மகனுக்கு பரோல் வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

32 ஆண்டுகளுக்கு பின் நண்பர்களுடன்...

இந்நிலையில், கடந்தாண்டு மே 28ஆம் தேதி முதல் தற்போது வரை பேரறிவாளன் சுமார் 9 மாத காலமாக பரோல் விடுப்பில் வீட்டிலேயே தங்கியிருந்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றம், பேரறிவாளனின் நன்னடத்தை காரணமாக, 32 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு முன்பு பிணை வழங்கி உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து, புழல் சிறைக்குச் சென்று பரோலை ரத்து செய்த பின், பேரறிவாளன் 32 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினரின் பாதுகாப்பு இல்லாமல் தன் தயார் அற்புதம்மாள், நண்பர்கள் ஆகியோருடன் சென்னையில் இருந்து தனி வாகனத்தில் வேலூர் வந்தார்.

இந்நிலையில், இரவு நேரத்தில் தேநீர் கடை ஒன்றில் தேநீர் அருந்தி நண்பர்களுடன் பேசி மகிழ்ந்தார். பேரறிவாளன், எப்போதும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பில் இருந்துவந்த நிலையில், தற்போது சுதந்திரமாக வெளியே வந்திருப்பதை பார்த்து பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க:சக்திவாய்ந்த பூகம்பம் - ஜப்பானில் மீண்டும் சுனாமியா?

ABOUT THE AUTHOR

...view details