திருப்பத்தூர்:தமிழ்நாடு-ஆந்திர எல்லை வனப்பகுதியில், கடந்த ஜூலை 8 ஆம் தேதி, இரவு பெய்த கனமழையால் நாராயணபுரம், அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை, ஆவாரம் குப்பம் வழியாக பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில் வாணியம்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று (ஜூலை 18) இரவு பெய்த மழை காரணமாக பாலாற்றில் இரண்டாவது முறையாக வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் ஏரளாமான மீன்கள் அடித்து வருவதால் அப்பகுதி மக்கள், சிறுவர்கள் மீன்களை பிடித்து மகிழ்ந்து வருகின்றனர்.