தமிழ்நாடு

tamil nadu

தனி ரயிலில் சென்று ஆய்வு செய்த மத்திய ரயில்வே அமைச்சர்!

By

Published : May 20, 2022, 10:33 PM IST

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சிறப்பு ரயிலில் இருந்தபடி இருப்புப்பாதையின் தரம்குறித்து ஆய்வு செய்தார்.

தனி ரயிலில் சென்று ஆய்வு சேய்த ரயில்வே மத்திய இணை அமைச்சர்
தனி ரயிலில் சென்று ஆய்வு சேய்த ரயில்வே மத்திய இணை அமைச்சர்

திருப்பத்தூர்: நேற்றைய (மே 19) தினம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்த ரயில்வே மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இன்று(மே 20) அவருக்கென்று சென்னையில் இருந்து பெங்களூரு வரை ரயில்வே இருப்புப்பாதைகளை ஆய்வு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரயிலில் காலை சுமார் 10 மணிக்கு புறப்பட்டு மதியம் சுமார் 2.20 மணி அளவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தார்.

இதனைத்தொடர்ந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் ரயிலில் இருந்தபடியே ஆய்வு மேற்கொண்ட பின்பு, அதே சிறப்பு ரயிலில் பெங்களூரு வரை சென்று ஆய்வு செய்த பின்பு, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்வதாக கூறப்பட்டது.

ஆய்வின்போது சென்னை மண்டல ரயில்வே பொது மேலாளர் மல்லையா ரயில்வே சிறப்பு பாதுகாவலர்களுடன் மத்திய ரயில்வே அமைச்சருடன் ஜோலார்பேட்டை வரை வந்து பெங்களூருக்கு வழி அனுப்பி வைத்தனர்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இவரைத் தொடர்ந்து பெங்களூரு தெற்கு வடக்கு மண்டல பொது மேலாளர் சஞ்சய் கிஷோர் ரயில்வே சிறப்பு பாதுகாவலர்களுடடன் வந்து மத்திய அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து உடன் அழைத்து பெங்களூருக்கு சென்றனர்.

இதையும் படிங்க:காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் மதுரை ரயில்வே கோட்டம்

ABOUT THE AUTHOR

...view details