தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க அலுவலர்கள் ஆய்வு! - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி நியூ டவுண் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் இன்று (பிப்.16) ஆய்வு மேற்கொண்டனர்.

சுரங்கப்பாதை அமைக்க அலுவலர்கள் ஆய்வு
சுரங்கப்பாதை அமைக்க அலுவலர்கள் ஆய்வு

By

Published : Feb 16, 2021, 3:39 PM IST

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நியூ டவுண் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைத்துத்தரக் கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர் அந்த பகுதியில், சுரங்கப்பாதை அமைக்க ரூ.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகளைத் தொடங்க ரயில்வே தலைமை பொறியாளர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, அமைய இருக்கும் சுரங்கப்பாதையின் வரைபடத்தையும், கட்டுமான அமைப்புகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டனர். வாணியம்பாடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியூ டவுண் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details