தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு

நாட்றம்பள்ளி அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ரயில்வே ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரயில்வே ஊழியர்
ரயில்வே ஊழியர்

By

Published : Feb 3, 2022, 7:47 PM IST

திருப்பத்தூர்:ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் வாலாட்டி பகுதியைச் சேர்ந்த நந்தி கவுண்டர் மகன் செல்வராஜ் (75) இவர் முன்னாள் ரயில்வே ஊழியர் ஆவார். நேற்று (பிப்.02) வீட்டிலிருந்து நாட்றம்பள்ளி பெட்ரோல் போட தனியார் வானவில் கல்லூரிக்கு அருகே சென்று கொண்டிருந்தார்.

இதனையடுத்து நாட்டறம்பள்ளி வேட்டப்பட்டு பகுதியிலிருந்து திருப்பத்தூர் நோக்கி பல்சர் இரு சக்கரத்தில் வந்த கோவிந்தன் (27) மற்றும் அவருடைய மனைவி காவேரி (19) வயது ஆகிய இருவரும் வானவில் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக செல்வராஜ் ஸ்கூட்டி வண்டியின் மீது நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே தூக்கி எறியப்பட்டு செல்வராஜ் உயிரிழந்தார். அதன் பின்னர் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இதன் காரணமாக நாட்டறம்பள்ளி காவல்துறையினர் உடற்கூராய்வுக்காக வழங்கப்படும் கடிதத்தை வழங்காததால், சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக உயிரிழந்த செல்வராஜன் உடலை உறவினர்கள் வெளியே வைத்து கதறி அழுதனர். இதன் காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:'எஃப்.ஐ.ஆர்' ட்ரெய்லர் வெளியீடு; மேடையில் கண்கலங்கிய விஷ்ணு விஷால்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details