தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலணி தொழிற்சாலையில் மூன்றாவது நாளாக தொடரும் வருமானவரித்துறை ரெய்டு - Deputy Commissioner of Income Tax

ஆம்பூர் தனியார் காலணி மற்றும் தோல் தொழிற்சாலையில் மூன்றாவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 25, 2022, 4:20 PM IST

திருப்பத்தூர்:ஆம்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தனியார் நிறுவனமான பரிதா குழுமத்திற்குச் சொந்தமான காலணி மற்றும் தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழிற்சாலைகளில் நேற்று முன்தினம் (செவ்வாய் கிழமை) காலை 8 மணி முதல் வருமான வரித்துறை துணை கமிஷனர் கிருஷ்ண பிரசாத் தலைமையிலான 110க்கும் மேற்பட்ட அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

பரிதா குழும காலணி மற்றும் தோல் தொழிற்சாலை

தற்போது மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. அலுவலர்கள் 52 மணி நேரத்திற்கும் மேலாக தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அலுவலர்கள் தங்கும் விடுதிகளில் தங்கி சுழற்சி முறையில் தற்போது வரை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பரிதா குழுமம்

தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளக் கணக்குகளை ஆண்டுகள் வாரியாக கணக்கீடு செய்தும், காலணிகள் ஏற்றுமதி மற்றும் உதிரிபாகங்கள் இறக்குமதி குறித்த கணக்குகளுக்கான ஆவணங்களை அலுவலர்கள் சுழற்சி முறையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 15 ஆண்டுகளுக்கு பிறகு கீழ்கோத்தகிரி வனப்பகுதியில் தென்படும் இருவாச்சி பறவைகள்...

ABOUT THE AUTHOR

...view details