டெல்லியில் நடந்த சமய மாநாட்டிற்கு சென்று வந்த வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த எட்டு பேர் கண்டறியப்பட்டு அவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இருவருக்கு கரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர் அவர்கள் இருவரும் தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற ஆறு பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து தீவரமாக கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட எட்டு பேரின் குடும்பத்தைச் சேர்ந்த 52 பேர் தனியார் மகளிர் கல்லூரியில் ஆண்களும், தனியார் மண்டபத்தில் பெண்கள், குழந்தைகளும் தனிமைபடுத்தப்பட்டு ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.பசுபதி தலைமையிலான மருத்துவ குழுவினர் அவர்களைக் கண்காணித்தனர்.
இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட 52 பேருக்கு செய்த ரத்த பரிசோதனையில் அவர்களுக்கு கரோனா நோய் தொற்று இல்லை என்பதால் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், சுகாதார துறையின் ஆலோசனையின் பேரில் அமைச்சர் நிலோபர் கபில் நேரில் சென்று அவர்களுக்கு ரோஜா பூ வழங்கி வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார். மேலும் வீட்டிலும் தனிமையில் இருக்க அவர்களுக்கு ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் பசுபதி அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: சேவை செய்ய வாழ்க்கையை தியாகம் செய்தவர் இயேசு - பிரதமர் மோடி