திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் சில நாள்களாக பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்தது. இந்நிலையில் 5 நாள்கள் கடந்தும் வெள்ள நீர் அப்புறப்படுத்தவில்லை.
இது குறித்து அப்பகுதி மக்கள் பல முறை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும், இதுவரையில் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை (நவ.22) மீண்டும் ஆம்பூர் - பேர்ணாம்பட் சாலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.