தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக்கிற்கு டஃப் கொடுக்கும் சாராய விற்பனை.. போலீசார் செயலால் பொதுமக்கள் புலம்பல்! - கள்ளச்சாராயம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே போலீசார் உதவியோடு கள்ளச்சாரய விற்பனை அமோகமாக நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ள அப்பகுதி மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டாஸ்மாக்கிற்கு டஃப் கொடுக்கும் சாராய விற்பனை.. போலீசார் செயலால் பொதுமக்கள் புலம்பல்!
டாஸ்மாக்கிற்கு டஃப் கொடுக்கும் சாராய விற்பனை.. போலீசார் செயலால் பொதுமக்கள் புலம்பல்!

By

Published : Nov 9, 2022, 3:37 PM IST

திருப்பத்தூர்:நாட்றம்பள்ளி அடுத்த கொண்டகிந்தணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சாமகவுண்டனூர் பகுதியை சேர்ந்த குள்ளரங்கன் என்பவரின் மகன் சிவராஜ் அவரது அண்ணன், மனைவி அம்சா ஆகியோர் அப்பகுதியில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

சிவராஜ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையிலும் அம்சா என்பவர் சிவராஜ் என்பவரின் மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவனை வைத்து இரவு பகலாக கள்ளச்சாராயம் அமோகமாக விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் சிவராஜ் என்பவர் ஜாமினில் வெளிவந்த அவர் மனைவி, மகன் ஆகியோர் துணையுடன் பாக்கெட் தாயார் செய்து கொடுக்க சிவராஜ் மற்றும் அம்சா ஆகியோர் டாஸ்மாக் வருமானத்தை மிஞ்சும் அளவிற்கு இரவு, பகலாக விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள கூலி தொழிலாளிகள், இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் சாந்தி என்பவருக்கு அப்பகுதி பொதுமக்கள் ரகசிய தகவல் அளித்துள்ளனர்.

டாஸ்மாக் வருமானத்தை மிஞ்சும் அளவிற்கு- நாட்றம்பள்ளி அருகே கள்ளச்சாராயம் விற்பனை அமோகம்!

ஆனால் காவல் ஆய்வாளர் அங்கு செல்லும் போது சிவராஜ் மற்றும் அம்சா ஆகியோர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். நாட்றம்பள்ளி பகுதியில் கள்ளச்சாரயத்தை ஒழிக்க ஆய்வாளர் சாந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், அதே காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றம் காவலர்கள் கள்ளச்சாராய வியாபாரிகளுடன் கைகோர்த்துக்கொண்டு இதைத் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:ரூ.15 கோடி மதிப்பிலான திருமால் சிலை மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details