திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அடுத்த என்ஜிஓ நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெங்கடேசன். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னைக்கு வேலைக்காக சென்றுள்ளார்.
அவரது மனைவி சங்கீதா பர்கூரில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவரும் பணிக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று (ஆக.4) இவர்களது வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து 25 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
அதேபோல் அவரது வீட்டின் அருகே நாட்டறம்பள்ளி முன்னாள் வட்டாட்சியர் பிரபு கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தந்தை சுந்தரம் உடல்நிலை சரியில்லாமல் கடலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பார்க்க பிரபு கணேஷ் சென்றுள்ளார்.