ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியதாவது, “10, 11 ஆகிய வகுப்பினருக்கான பொதுத்தேர்வுகளை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது வரவேற்கத்தக்கது. அதுபோல் நல்ல விஷயங்கள் எதுவாக இருந்தாலும் பொதுவாக தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி செய்கிறது.
பொதுத்தேர்வு ரத்து: அரசுக்கு நன்றி தெரிவித்த காங்கிரஸ் தலைவர் - Congressman thanked the government
திருப்பத்தூர்: 10, 11ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்த தமிழ்நாடு அரசுக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நன்றி தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி
இந்தத் தேர்வு விவகாரத்தில், பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டிருந்தால் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால், அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் தற்போது அரசு எடுத்து இருக்கக்கூடிய இந்த முடிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க:10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - வைகோ, ராமதாஸ் வரவேற்பு!