திருப்பத்தூர் அடுத்த ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மங்கையர்க்கரசி. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். மங்கையர்க்கரசி நேற்று (மார்ச்.25) மாலை ஆசிரியர் நகர் அருகே நடந்து சென்றபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர்.
அப்போது, தாலி சங்கிலியை இறுக்கிப் பிடித்துக்கொண்ட மங்கையர்கரசி கூச்சலிட்டதைக் கேட்டு, அங்கிருந்தவர்கள் ஓடி வந்துசங்கிலி பறிக்க முயன்ற இளைஞரை பிடித்து சராமரியாக தாக்கியுள்ளனர். இதனிடையே, மற்றொரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.