திருப்பத்தூர்: தமிழ்நாடு முழுவதும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை உள்ள மொத்தம் 799 பள்ளிகளை சேர்ந்த 1 லட்சத்து 27 ஆயிரத்து 138 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள்
திருப்பத்தூர் மீனாட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இலவச பாட புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா வழங்கினார்.
இலவச பாடப்புத்தகங்கள்
இந்நிலையில் மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும், மாணவிகளுக்கான இலவச பாடப் புத்தகங்களை, மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா நேற்று (ஜூன் 25) வழங்கினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : ’18 வயது தாண்டிய மாணவர்கள் தடுப்பூசி பெற்றதும் கல்வி நிறுவனங்கள் திறக்க பரிசீலனை’