திருப்பத்தூர் ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் அருகில் முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்றுகூடினர்.
இவ்வமைப்பினர் அனைவரும் ஒன்றுசேர்ந்து இஸ்லாமிய மதத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியைச்சேர்ந்த நூபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் மீது UAPA பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின்கீழ் கைது செய்யக்கோரி, நூபர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரின் புகைப்படம் கொண்ட உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.