திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கரும்பூர் பகுதியில் பழமை வாய்ந்த கல்யாண வெங்கட்ராமன் (பெருமாள்) திருக்கோயில் அமைந்துள்ளது. அக்கோயிலில் மண்டல பூஜைக்காக கூடிய இரு பிரிவினருக்கு இடையே வாக்குவாதம் உருவாகி பதற்றமான சூழல் உண்டானது.
இதனையடுத்து, கடந்த ஜூலை மாதம் 10ஆம் தேதி கரும்பூர் வட்டாட்சியர் இரு தரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், தீர்வு எட்டப்படாத நிலையில் மீண்டும் ஜூலை 31ஆம் தேதி மேல் சான்றோர்குப்பம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்னை : கோயிலுக்கு சீல் வைத்த வருவாய் துறையினர் ! அதிலும், சமாதான உடன்படிக்கை ஏற்படாததால் இருதரப்பிலும் 3 பேரை நியமனம் செய்து பூஜை செய்ய அனுமதித்தனர். இதனிடையே, இன்று (டிச.23) மீண்டும் இரு சமூகத்தினரிடையே பிரச்னை ஏற்பட்டதாக அறிய முடிகிறது. இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து அங்கு விரைந்து வந்த வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையிலான வருவாய் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயிலை பூட்டி சீல் வைத்தனர். அத்துடன், மறு உத்தரவு வரும் வரை யாரும் கோயிலை திறக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க :இலவச பட்டா முறைகேடுகள் குறித்து விசாரிக்க உத்தரவு!