திருப்பத்தூர்:மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (45). இவர் இன்று(மே 26) மதியம் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் வேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் தனியார் பேருந்தில் மளிகை சரக்குகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து நடத்துனரிடம் மாதனூர் பகுதியில் இறங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மாதனூரில் பேருந்து நிற்காது எனக்கூறி ரஞ்சித்தை ஆபாசமாகப் பேசித் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் சிலர் உதவியுடன் அதிவேகமாக மாதனூர் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
பின்னர் மாதனூர் பகுதியில் தனியார் பேருந்து வந்த பொழுது, பேருந்தை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வழிமறித்த ரஞ்சித் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கற்களால் தாக்கமுற்பட்டனர்.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள் பின்னர் மாதனூர் பேருந்து நிலையத்திலிருந்த பொதுமக்கள் இருவர்களிடமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்து தனியார் பேருந்தை அனுப்பி வைத்தனர். இதனால் மாதனூர் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
இதையும் படிங்க:ஸ்ரீநகர் - கார்கில் நெடுஞ்சாலையில் 1,200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு!