தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து: 2 கர்ப்பிணிகள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் - தனியார் பேருந்து லாரி மீது மோதியது

வேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து லாரி மீது மோதியதில் 2 கர்ப்பிணிகள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து 2 கர்ப்பினி பெண்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் காயம்
லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து 2 கர்ப்பினி பெண்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் காயம்

By

Published : May 2, 2022, 8:24 PM IST

திருப்பத்தூர் : வேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓஏஆர் திரையரங்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னர் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

தனியார் பேருந்தில் பயணம் செய்த கௌசல்யா, ப்ரீத்தி என்ற இரண்டு கர்ப்பிணிகள் உட்பட வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் நகர காவல் துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:நிலக்கரி பற்றாக்குறை - மேட்டூரில் மின் உற்பத்தி பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details