தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடியில் 25ஆவது தேசிய உருது புத்தக கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்!

வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நாளை 3ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை 25ஆவது தேசிய உருது புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

By

Published : Jan 2, 2023, 3:27 PM IST

வாணியம்பாடியில் 25வது தேசிய உருது புத்தக கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்
வாணியம்பாடியில் 25வது தேசிய உருது புத்தக கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்

வாணியம்பாடியில் 25ஆவது தேசிய உருது புத்தக கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்!

திருப்பத்தூர்: வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கம் மற்றும் உருது மொழி வளர்ச்சிக்கான தேசிய ஆணையம் இணைந்து நடத்தும் இஸ்லாமியாக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நாளை 3ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை, 25ஆவது தேசிய உருது புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 100 உருது பதிப்பாளர்கள் தங்களது புத்தகங்களை விற்பனைக்காக காட்சிப்படுத்த உள்ளனர். 9 நாட்கள் நடக்க உள்ள இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த புத்தக கண்காட்சியில் பங்கு கொள்வதற்கு மக்கள் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் வரவுள்ளனர்.

இந்த கண்காட்சியை நாளை 03.01.2023 காலை 10.00 மணிக்கு இஸ்லாமியாக் கல்லூரி மைதானத்தில் உருது மொழி வளர்ச்சிக்கான தேசிய ஆணையத்தின் இயக்குநர் முனைவர் சேக். அகீல் அஹ்மத் தொடங்கி வைப்பார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வா, K. H. குழும நிறுவங்களின் நிர்வாக இயக்குநர் ஹாஷிம், விஐடி வேந்தர் ஜி. விசுவநாதன், மாவட்ட காவல் கண்கானிப்பாளர், பாலகிருஷ்ணன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில் குமார், நகர்மன்றத் தலைவர் உமா பாய் சிவாஜி கணேசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: Fact Check: முதல்வர் நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர்களா? நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details