திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரக புதிய கட்டடம் 110 கோடி ரூபாய் மதிப்பில், 7 அடுக்கு தலங்களாக கட்டி முடிக்கப்பட்டு, சிறிய சிறிய இறுதி பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், வருகின்ற 21-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருப்பத்தூருக்கு வருகை தந்து திறந்து வைத்து 10,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால், தற்காலிகமாக முதலமைச்சர் வருகையை தேதி அறிவிக்காமல் தள்ளி வைப்பதாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் ஒரு தரப்பினர் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டிருந்ததால், அதற்கான என்ஓசி கிடைக்காததால் அதற்கு முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டால் தேவையற்ற சர்ச்சைகள் எனும் காரணத்தால் தள்ளி வைக்கப்பட்டது எனவும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதால், 2 நாட்களுக்கு எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளமாட்டார் சென்னையிலிருந்து தலைமைச்செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைப்பு இதையும் படிங்க:'கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருபவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட விவரத்தை சென்னை மாநகராட்சிக்கு அனுப்ப வேண்டும்'