தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் விடுமுறை: ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - tirupattur district news

திருப்பத்தூர்: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஏலகிரி மலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

By

Published : Jan 17, 2021, 11:03 AM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஏலகிரி மலையில் உள்ள படகு சவாரி, ரங்கராட்டினம் பூங்கா, டிரக்கிங் போன்ற இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கரோனா ஊரடங்கால் கடந்த பல மாதங்களாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் முகக்கவசம், தனிமனித இடைவெளி இன்றி ஏலகிரி மலைக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர்.

இதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. அரசின் கட்டுப்பாடுகளை கட்டாயம் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'பொங்கல் நாள்களில் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் வர தடை'

ABOUT THE AUTHOR

...view details