திருப்பத்தூர்மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டு லாரி கடத்தப்பட்டதாக அணைக்கட்டு ஜார்தான்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன் என்பவரை நாட்றம்பள்ளி காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தான் கடத்திய லாரியை உடைத்து விட்டதாகவும், அதற்குண்டான பணத்தை லஞ்சமாக கொடுத்து விடுவதாகவும் கூறி காவல் நிலையத்தில் வைத்து ரூபாய் 12 லட்சம் கொடுப்பதாக உறுதியளித்தார். அதன் பேரில், முதல் தவணையாக ரூபாய் 7 லட்சம் கொடுத்தார். மீதம் உள்ள பணத்தை கொடுப்பதற்கு முன்னதாக ராஜசேகரன், இது குறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் காமராஜ், உதவி ஆய்வாளர் சேகர் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கு நடந்து வரும் நிலையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், குற்றம்சாட்டப்பட்ட அப்போது நாட்றம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளர் காமராஜ், உதவி ஆய்வாளர் சேகர் மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள், நாசர், கார்த்திக், அறிவு செல்வம், ரகுராம் ஆகியோரை நிரந்தர பணி நீக்கம் செய்ய காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இச்சம்பவம் காவல் துறையினரிடயே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ரம்ஜான் திருநாளில் கொடூரம்.. ரூ.13 ஆயிரம் பணத்திற்காக ஒருவர் அடித்துக்கொலை.. நடந்தது என்ன?