திருப்பத்தூர்:ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெருவில் வசிக்கும் அனாஸ் அலி என்ற இளைஞர் வேலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறி கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அனாஸ் அலியை கைது செய்தனர்.
கல்லூரி மாணவன் அனாஸ் அலி வீட்டில் காவல்துறை சோதனை - கல்லூரி மாணவன்
ஆம்பூரில் கடந்த ஜூலை மாதம் மத்திய உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவன் அனாஸ் அலி வீட்டில் காவல் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
Etv Bharat
தொடர்ந்து இளைஞரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் இன்று ஆம்பூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவல் துறையினர், அனாஸ் அலி வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:தாழ்த்தப்பட்டோர் குடும்பத்தின் மீது மர்மநபர்கள் தாக்குதல்