தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளுக்கு நூதன தண்டனை! - police punish

திருப்பத்தூர்: முழு ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரிந்த இருசக்கர வாகன ஓட்டுகளுக்கு காவல் துறையினர் நூதன முறையில் தண்டனை வழங்கினர்.

நூதன தண்டனை வழங்கிய காவல் துறை
நூதன தண்டனை வழங்கிய காவல் துறை

By

Published : May 17, 2021, 7:34 AM IST

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு விதிகளை மதிக்காமல் பலரும் இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றித் திரிகின்றனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் குடியாத்தம் நேதாஜி சிலை அருகே போக்குவரத்து காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்களை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

நூதன தண்டனை வழங்கிய காவல் துறை

இதையடுத்து, அவர்களை அங்குள்ள நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை பத்துமுறை சுற்றி வரச் சொல்லி நூதனமான முறையில் தண்டனை வழங்கினர். தொடர்ந்து காவல் ஆய்வாளர் செல்லபாண்டியன் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க: ஊரடங்கு மீறல்: தூத்துக்குடியில் 86 லட்சம் அபராதம் வசூல்!

ABOUT THE AUTHOR

...view details