திருப்பத்தூர் மாவட்டம் தர்மராஜா கோயில் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் சுபாஷ் (55). இவரது மனைவி விஜயலட்சுமி (45). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இவர், திருப்பத்தூர் கோட்டை தெருவிலுள்ள சிவன் கோயிலில் உதவியாளராக சேவை செய்துவந்தார். மேலும், சுபாஷ் வழக்கமாக காலை நேரத்தில் திருப்பத்தூர் ரயில்வே பிளாட்பாரத்தில் நடைபயிற்சி செய்வது வழக்கம்.
அதேபோல் இன்று (நவ.16) காலை நடைபயிற்சிக்காக வந்த சுபாஷ், இரட்டைமலை சீனிவாசன் பேட்டைப் பகுதிக்குச் செல்லும் வழியிலுள்ள இரண்டாவது ரயில்வே தண்டவாளத்தில், முகம் சிதைந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார்.