தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் திருட முயற்சி: அபாய ஒலி ஒலித்ததால் தப்பியோடிய திருடர்கள் - ஏடிஎம் இயந்திரம்

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் திருட முயன்ற கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பணம் திருட முயன்ற ஏடிஎம் இயந்திரம்
பணம் திருட முயன்ற ஏடிஎம் இயந்திரம்

By

Published : Sep 21, 2020, 1:04 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்தை கோடியூர் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயங்கிவருகிறது. இந்த, ஏடிஎம் இயந்திரத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத கும்பல் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றுள்ளது.

அப்போது, அங்கிருந்த அபாய ஒலி ஒலித்ததால் திருடர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஜோலார்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பணம் திருட முயன்ற ஏடிஎம் இயந்திரம்

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த இரு தினங்களாக ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைப் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க:ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி: அபாய சங்கு ஒலித்ததால் திருடர்கள் தப்பியோட்டம்!

ABOUT THE AUTHOR

...view details