தமிழ்நாடு

tamil nadu

வாணியம்பாடி அருகே இளைஞர் உயிரிழப்பு - காவல்துறை விசாரணை

By

Published : Jan 26, 2022, 10:13 AM IST

வாணியம்பாடி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரது நண்பரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாணியம்பாடி அருகே இளைஞர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை
வாணியம்பாடி அருகே இளைஞர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த சங்கராபுரத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவரும், கணவாய் புதூரை சேர்ந்த திருமலையும் சுந்தர் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் நண்பர்கள் என்பதால் கடந்த 21ஆம் தேதியன்று தமிழ்நாடு - ஆந்திரா எல்லை பகுதியிலுள்ள புல்லூர் தடுப்பணைக்குச் சென்றுள்ளனர்.

அங்குள்ள வாகன நிறுத்தகத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். பின்னர் திருமலை மட்டும் அங்கிருந்து பேருந்தில் வீட்டுக்கு வந்துள்ளார். நீண்ட நேரம் கடந்தும் யுவராஜ் வீடு திரும்பவில்லை. இதனால், யுவராஜின் தந்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது நண்பரான திருமலையை தொடர்பு கொண்டு கேட்டபோது இருவரும் தடுப்பணை அருகே சென்றதாகவும், அவர் எங்கு சென்றார் என தெரியாது என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக யுவராஜின் தந்தை கோபால் ஆந்திர மாநிலம் குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து திருமலையிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், புல்லூர் தடுப்பணை வனப்பகுதியில் சடலம் ஒன்று உள்ளதாக ஆடு மேய்க்க சென்றவர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் பேரில் அங்கு சென்று பார்த்தபோது அது காணாமல் போன யுவராஜின் சடலம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது நண்பரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:திருடிய பணத்தில் கார் வாங்கிய திருடன்

ABOUT THE AUTHOR

...view details