திருப்பத்தூர் மாவட்டம், சந்திரபுரம் அருகேயுள்ள கொல்லகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தர்மன் (வயது 75). இவர் தனது விவசாய நிலத்தில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் துவரை சாகுபடி செய்துள்ளார்.
அதனிடையே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா செடியும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.