தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடியில் 14 காவலர்கள் உள்பட 156 பேருக்கு கரோனா பரிசோதனை - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் : வாணியம்பாடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவலர் உடன் தொடர்பில் இருந்த 14 காவலர்கள் உள்பட 156 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Police corona swab test in Tirupattur
Police corona swab test in Tirupattur

By

Published : Aug 13, 2020, 10:27 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 1,863 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,219 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 610 பேர் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் ஒருவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து பூட்டப்பட்டது.

மேலும், அவருடன் தொடர்பில் இருந்த 14 காவல்துறையினர், வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 156 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் அங்குள்ள தனியார் மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details