தமிழ்நாடு

tamil nadu

உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்த மலை கிராம மக்கள் - காவல்துறையினர் பேச்சுவார்த்தை

By

Published : Oct 4, 2021, 2:11 AM IST

ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து வரும் மலை கிராம மக்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

http://10.10.50.85//tamil-nadu/03-October-2021/tn-tpt-01-police-program-vis-scr-pic-tn10018_03102021192940_0310f_1633269580_477.jpg
http://10.10.50.85//tamil-nadu/03-October-2021/tn-tpt-01-police-program-vis-scr-pic-tn10018_03102021192940_0310f_1633269580_477.jpg

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மலை கிராம மக்கள் ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து வரும் நிலையில், கிராம மக்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மற்றும் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனுர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கனேரி மலை கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டதால், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணித்து வந்தனர். இதனால் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்காக 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில் திமுக, அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் அடக்கம். அவர்களும் கடைசி நாளான 25ஆம் தேதி வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். ஊராட்சி மன்ற 9 வார்டு உறுப்பினர் பதவிக்கும் ஒருவர்கூட போட்டியிடவில்லை.

தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்களிடையே வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுப்புராஜீ மற்றும் ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் சென்று கிராமத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு கிராம மக்கள் வாக்களிக்க செல்பவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம் என்று உறுதி கூறினர். அதன்பின்னர் மலை கிராமத்திலேயே காவலர்கள் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடத்தினர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details