தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்த முயற்சி - இருவர் கைது! - லாரி பறிமுதல்

ரேஷன் அரிசியை வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

Police
Police

By

Published : May 13, 2022, 6:09 PM IST

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த விஜிலாபுரம் கோடியூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வாணியம்பாடி காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோடியூர் பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக லாரியில் ரேஷன் அரிசி கடத்திச்செல்வதை கண்டுபிடித்தனர். உடனடியாக லாரி ஓட்டுநர் வெங்கடசேன், கிளீனர் வேலு இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அதே பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து, கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வீட்டில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர், அங்கிருந்த 5 டன் ரேஷன் அரிசி மற்றும் அரிசி எடை போடும் இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனர்.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்து, அனைத்தையும் வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வீட்டின் உரிமையாளர் பிரபுவை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் 12ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details