திருப்பத்தூர்:குரிசிலாப்பட்டு அடுத்த இருணாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் மேகநாதன் (38). இவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்திற்கு, ஏராளமான மயில்கள் உணவு தேடி வருவது வழக்கம்.
இதன்காரணமாக எலிக்கு வைக்கக்கூடிய விஷமருந்தை தானியங்களில் கலந்து நிலத்தில் வீசியுள்ளார். இதனை உண்ட ஏழு மயில்கள் உயிரிழந்துள்ளன. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் திருப்பத்தூர் வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் அங்கு விரைந்த வன அலுவலர் மேகநாதனை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வனச்சரக அலுவலர் பிரபு தெரிவிக்கையில், “தேசியப் பறவையான மயிலை கொல்வது சட்டவிரோதமான செயல். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சுமார் ஏழு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்றார்.
இதையும் படிங்க: சாலையை கடக்க முயன்ற தம்பதி - லாரி மோதி உயிரிழப்பு