தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களுக்கு வலைவீச்சு - atm theft attempt in crime news

ஆம்பூர் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

atm
atm

By

Published : Nov 27, 2021, 9:46 AM IST

திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி தனியார் ஏடிஎம் (இந்தியா 1) மையம் அமைந்துள்ளது.

இந்த ஏடிஎம்மிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிசிடிவி கேமராவை உடைத்து பணம் திருட முயன்றனர். இருப்பினும் பணம் நிரப்பும் பகுதியை உடைக்க முடியாததால் அவர்கள் தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் இன்று (நவம்பர் 27) காலை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

அத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் இது குறித்து ஆய்வுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

இதையும் படிங்க:திண்டுக்கல் குழந்தைகள் கரோனா சிறப்பு வார்டில் திருட்டு!

ABOUT THE AUTHOR

...view details