தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு! - Tirupattur district news in tamil

திருப்பத்தூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Poision gas attack one dead in Tirupattur district
தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

By

Published : Jun 15, 2021, 3:39 PM IST

திருப்பத்தூர்:ஆம்பூர் அருகே துத்திப்பட்டு பகுதியில் என்.எம்.ஹெச் தோல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் புத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(55), ரத்தினம்(60), பிரசாந்த்(27) ஆகிய மூன்று தொழிலாளர்கள் இன்று(ஜூன் 15) ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, விஷவாயு தாக்கியதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த தொழிலாளரி ரமேஷ்

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தியும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:சினிமா பாணியில் தண்ணி காட்டும் ’பப்ஜி’ மதன்!

ABOUT THE AUTHOR

...view details