திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடை, பூக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. இங்கு, பெரும்பால கடைகளில் தடையை மீறி நெகிழிப் பைகள் பயன்படுத்தி வந்ததாகத் தெரிகிறது. இது குறித்து நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, முன்னறிவிப்பின்றி நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் தலைமையிலான திடீர் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், பேருந்து நிலையத்தில் உள்ள பேக்கரி, பூக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்பாட்டிலிருந்தது தெரியவந்தது.