திருப்பத்தூர்மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழ்நாடு-ஆந்திரா எல்லையிலுள்ள அண்ணா நகரில் விதை பறவைகள் இளைஞர் சங்கம் மற்றும் வேலூர் நேரு யுவகேந்திரா இணைந்து தலைவர் பூர்ணிமா தலைமையில் சுமார் 10 ஆயிரம் பனை விதைகள் (ஆக.21) நடப்பட்டன. இதில் சிவராஜ், செயலாளர் பெரியசாமி, பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாணியம்பாடி அருகே பனை விதைகள் நடவு விழா
வாணியம்பாடி அருகே தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில் சுமார் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் விழாவை செந்தில்குமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
Etv Bharat
இதில், சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்துகொண்டு பனை விதைகள் நட்டார். பின்னர், பனை விதைகளை சேகரித்த சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களுக்கு கலாம் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் ராஜா சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு... ஏகனாபுரம் மக்கள் ஒப்பாரி போராட்டம்...