தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி வளாகத்திற்குள் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பு! - 9 foot python entering the school

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே பள்ளி வளாகத்திற்குள் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பை பொதுமக்களே பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Python
Python

By

Published : Dec 18, 2020, 7:13 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியில் இயங்கிவருகிறது நகராட்சி இந்து தொடக்கப்பள்ளி.

பள்ளியில் பாம்பு

இந்நிலையில் நேற்று (டிச. 17) மாலை இந்தப்பள்ளி வளாகத்திற்குள் 9 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பள்ளிவளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் கண்டனர்.

பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அந்த மலைப்பாம்பை பிடித்து, பின்னர் வாணியம்பாடி வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

எல்லையில் விடப்பட்ட பாம்பு

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத் துறையினர் மலைப்பாம்பை மீட்டு தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியில் விட்டனர்.

இதையும் படிங்க: திருவள்ளூர் காவல் துறைக்கு ஸ்காச் விருது!

ABOUT THE AUTHOR

...view details