தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் - பேரறிவாளன்

திருப்பத்தூர்: 30 நாள்கள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் இன்று தனது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார்.

parole
parole

By

Published : Oct 9, 2020, 11:52 AM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு, 90 நாள்கள் பரோல் எனப்படும் சிறை விடுப்பு கேட்டு, அவரது தாயார் அற்புதம்மாள் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கில் சிறைத்துறை தரப்பில் பேரறிவாளனுக்கு பரோல் விடுப்பு தர முடியாது எனக் கூறப்பட்டது. ஆனால், இவ்விவகாரத்தின் சிறைத்துறை மற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு, பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் விடுப்பு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, இன்று காலை சென்னையில் உள்ள புழல் சிறையில் இருந்து, வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து வரப்படும் பேரறிவாளன், அங்கிருந்து பிற்பகலில் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படுகிறார்.

30 நாட்கள் பரோல் - இல்லம் செல்லும் பேரறிவாளன்

கரோனா தொற்று காரணமாக பேரறிவாளனை காண வெளியாட்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சட்டத்தின் முன் சட்டம் இயற்றுவோர்...

ABOUT THE AUTHOR

...view details