திருப்பத்தூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் இன்று (நவ.7) திருப்பத்தூர் மாவட்ட ராஜ குலத்தோர் பேரவை சார்பாக 'ராஜ குல' என்ற உட்பிரிவுக்குட்பட்ட அனைவரையும், 'ராஜ குலத்தோர்' என்கிற பெயரில் மாற்றி அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அப்பேரவையின் பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, மாநில நிர்வாகி மாதையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தமிழ்நாடு முழுவதும் சுமார் 60 லட்சம் பேர் எங்கள் சமுதாயத்தில் உள்ளனர். இந்நிலையில், எங்களது சாதி பெயரான 'வண்ணார்' என்பதை சலவைத் தொழிலோடு இணைத்து, களங்கம் விளைவிக்கும் வண்ணமாக அழைக்கக்கூடாது.
'ராஜ குல' என்ற சாதி உட்பிரிவை 'ராஜ குலத்தோர்' என அழைக்கக்கோரிக்கை! தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் வரிசை எண் 38-ல் உள்ள படியும் ஒன்றிய அரசின் அரசாணைப்படி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் வரிசை எண் 156-ல் உள்ள படியும் இருக்கக்கூடிய 'ராஜ குல' என்கிற உட்பிரிவை 'ராஜ குலத்தோர்' என்ற பெயரில் மாற்றி அழைக்க வேண்டும் எனவும்; அதற்கான அரசாங்க சான்றிதழ் வழங்கவும் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். அப்போது மாவட்ட செயலாளர் பிரபாகரன், அவைத்தலைவர் முருகன், துணை செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:"அடுத்த தேர்தலுக்கு பிறகு திமுக மட்டுமே நிலைத்து இருக்கும்" ...துரைமுருகன்