திருப்பத்துார் கந்திலி ஒன்றியத்துக்கு உள்பட்ட குனிச்சி மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35). இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் மூலம் வீடு கட்டினார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சாலை அமைக்க மண் கொட்டினார். இதை கேட்ட செல்வத்திற்க்கும் கோவிந்தராஜ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இது குறித்து செல்வம் கந்திலி காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அதே நேரத்தில் ஊர் மக்கள் சார்பில், கோவிந்தராஜ் மீது போலி ஆவணங்கள் கொடுத்து புறம்போக்கு நிலத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் வீடு கட்டியதாக வருவாய் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் குனிச்சி வருவாய் துறையினர் தாமரை திருமால், கந்திலி காவல்துறை உதவியுடன் அப்பகுதிக்கு அளவிட சென்றார். அப்போது கோவிந்தராஜ் கட்டிய வீட்டின் இடம் அரசுக்கு சொந்தமான ஓடை பகுதி என்று தெரியவந்தது.
இது குறித்து அலுவலர் விசாரித்தபோது கோவிந்தராஜ் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்யை தன்மீது ஊற்றிக்கொண்டார். உடனே அருகில் இருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்தனர்.
இதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் அவர் கட்டிய வீட்டின் இடத்தை அளவெடுத்தார். இது குறித்து வருவாய்த் துறையினர் கூறுகையில், “கோவிந்தராஜ் கட்டிய வீட்டை அளந்தபோது புறம்போக்கு நிலத்தில் வீடி கட்டியது தெரியவந்தது.