திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் நிரம்பின. அதன் ஒரு பகுதியாக ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் அருகே காமனூர்தட்டு மலைப்பகுதியில் ஊற்று நீர் காட்டாறாக ஓடி ஏரிப்பகுதியில் வந்தடைந்தது.
இதனால் பெரியாங்குப்பம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி நான்கு ஆண்டுகளுக்கு பின் நிரம்பி வழிந்தது. இதனை அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
பெரியாங்குப்பம் ஏரியின் மூலம் ஏரியை சுற்றியுள்ள நாச்சியார்குப்பம், ஆலங்குப்பம், சோலூர், புதூர், ரங்காபுரம், காட்டுக்கொல்லை ஆகிய பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, இன்னும் பல நாட்களுக்கு இப்பகுதி மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்துள்ளது.