ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் 90 நாள்களுக்கு பரோல் அனுமதி கோரிய நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் 30 நாள்கள் பரோல் வழங்கியது.
இதனையடுத்து அக்டோபர் 9ஆம் தேதி காலை சென்னை புழல் சிறையில் இருந்த பேரறிவாளனை சிறைத் துறை அலுவலர்கள் காவல் துறை பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு அழைத்துவந்தனர். இதனையடுத்து நீரிழிவு, சிறுநீரக தொற்று, முடக்குவாதம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன், கடந்த அக்டோபர் 26ஆம் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மீண்டும் சிகிச்சைக்காக நவம்பர் 7ஆம் தேதி விழுப்புரம் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் பேரறிவாளனின் உடல்நிலை குறித்து மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் 15 நாள்கள் பரோலை நீடித்தது. இந்நிலையில் 45 நாள்கள் பரோல் முடிந்த நிலையில் பேரறிவாளனுக்கு விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
பரோல் முடிந்து சிறை திரும்பிய பேரறிவாளன் இந்த மனு மீதான விசாரணை வருகின்ற ஜனவரி மாதம் ஒத்திவைத்து, பேரறிவாளனுக்கு மேலும் 15 நாள்கள் பரோல் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தவிரவிட்டிருந்தது. இன்றுடன் (டிச. 07) இரண்டு மாதம் பரோல் முடிந்த நிலையில், ஜோலார்பேட்டையிலுள்ள அவரது வீட்டிலிருந்து சென்னை புழல் சிறைக்கு பலத்த காவல் துறை பாதுகாப்புடன் பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிங்க:கரூர் காவிரி ஆற்றுப் பகுதியில் மணல் குவாரிகள் அமைப்பது தொடர்பான திட்டவரைவு வழக்கு முடித்துவைப்பு