தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு - பேரறிவாளன்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே வந்த பேரறிவாளன் 5 மாதங்களுக்குப் பிறகு இன்று(அக்.26) மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது.

Perarivalan. Parol
Perarivalan. Parol

By

Published : Oct 26, 2021, 1:55 PM IST

Updated : Oct 26, 2021, 3:24 PM IST

திருப்பத்தூர்:மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு சிறுநீரக கோளாறு இருக்கிறது.

இந்நிலையில் அவரின் தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று, மே28ஆம் தேதி ஒரு மாதம் பரோலில் பேரறிவாளன் விடுவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து கிருஷ்ணகிரி வேலூர், விழுப்புரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

முதலில் ஒரு மாத பரோலில் வந்த பேரறிவாளனுக்கு அடுத்தடுத்து 4 முறை பரோல் நீட்டிக்கப்பட்டு 150 நாள்கள் முடிவுற்ற நிலையில் இன்று(அக்.26) மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும் - முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி

Last Updated : Oct 26, 2021, 3:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details