தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குயில் 80 - அற்புதம் 75' பெற்றோருக்குப் பிறந்தநாள் கொண்டாடி நெகிழ்ந்த பேரறிவாளன்!

30 ஆண்டுகளுக்குப்பின் விடுதலையான பேரறிவாளன் ஜோலார்பேட்டை அருகே தன்னுடைய தாய்க்கும் தந்தைக்கும் ஒரே மேடையில் பிறந்தநாள் விழா கொண்டாடிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தேறியுள்ளது.

பேரறிவாளன்
பேரறிவாளன்

By

Published : Jul 31, 2022, 12:26 PM IST

திருப்பத்தூர்:மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையான பேரறிவாளன், ஜோலார்பேட்டை அருகே பார்த்தசாரதி சாலையில் உள்ள தனியார் திருமண வளாகத்தில் 'குயில் 80 - அற்புதம் 75' என்ற தலைப்பில் தன்னுடைய தாய்க்கும், தந்தைக்கும் நேற்று (ஜூலை30) ஒரே மேடையில் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார்.

இதனைத்தொடர்ந்து பேரறிவாளனின் தாயும் தந்தையும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டு கேக் வெட்டி, தங்களது அன்பை பறிமாறிக்கொண்டனர். மேலும், அலங்காநல்லூர் 'சமர் பறை' இசைக்குழுவினரின் இசை முழக்கம் நடைபெற்றது. அப்போது பேரறிவாளன், திரைப்பட நடிகர் சத்யராஜ் ஆகியோரும் மேடையில் நடனமாடிய நிகழ்ச்சி அனைவரையும் பரவசப்படுத்தியது.

குயில் 80 அற்புதம் 75 என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா

இதனைத்தொடர்ந்து 'குயில் 80 - அற்புதம் 75' என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரைப்படப்பிரபலங்கள் உள்ளிட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். சுமார் 30 ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்திருந்த பேரறிவாளனின் ஒட்டுமொத்த ஆசையையும் நிறைவேற்றிய வகையில் இந்த விழா அமைந்தது குறிப்பிடத்தக்கது.

பெற்றோருக்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்த பேரறிவாளன்

இதையும் படிங்க: வளர்ச்சி பாதையில் இந்திய பொருளாதாரம்... சென்னையில் நிர்மலா சீதாராமன் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details