தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம் மையத்தில் காய்கறிக் கடை - வாடிக்கையாளர்கள் அவதி - பெடரல் வங்கி

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே ஏடிஎம் மையத்தின் முன்பு தனிநபர் ஒருவர் காய்கறிக் கடை வைத்து விற்பனை செய்து வருவதால் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Vegetable shop running at ATM center
Vegetable shop running at ATM center

By

Published : Nov 17, 2020, 2:19 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியில் இயங்கிவரும் பெடரல் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்திற்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு கட்டடம் வாடகைக்கு விட்ட கிருஷ்ணன் என்பவர் கடந்த சில நாட்களாக ஏடிஎம் மையத்தின் முன்பு காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இதனால் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் செல்லும் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இது சம்பந்தமாக வங்கி நிர்வாகம் பணம் எடுக்கச் செல்லும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details