தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோதமாக மணல் அள்ளிய லாரியை சிறைப் பிடித்த மக்கள் - மணல் அள்ளிய கும்பலை சிறை பிடித்த மக்கள்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பச்சூர் அடுத்த கிணற்றுக் கொள்ளைப் பகுதியில் அனுமதி இல்லாமல் மண் எடுத்துக்கொண்டிருந்த கும்பலை பொதுமக்கள் சிறைப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணல் அள்ளிய லாரியை சிறை பிடித்த மக்கள்
மணல் அள்ளிய லாரியை சிறை பிடித்த மக்கள்

By

Published : Oct 20, 2021, 3:16 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த நியூ டவுன் பகுதியைச் சேர்ந்தவர், கணபதி (45). இவர் ஜிகே அசோசியேட்ஸ் என்கிற பெயரில் நடத்திவரும் நிறுவனம் மூலமாக, ஆம்பூர் வட்டம் சோளூர் பகுதியில் 3.14 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள மண் குவாரியில் சாதா கற்கள், கிராவல் மண் எடுப்பதற்கு அனுமதி பெற்று அதற்கான நடைச் சீட்டை வைத்துள்ளார்.

ஆனால், சட்டவிரோதமாக நாட்றம்பள்ளி தாலுகா, பச்சூர் அருகேவுள்ள கிணற்றுக்கொள்ளைப் பகுதியில் தினமும் மண் எடுத்து வந்துள்ளார்.

இதனையறிந்த ஊர் மக்கள் அப்பகுதியில் மண் எடுத்துச் சென்ற லாரியைத் தடுத்து நிறுத்தி, அவரிடமிருந்து பெறப்பட்ட அனுமதி நடைச்சீட்டை பார்த்துள்ளனர்.

அப்போது, முறையான அனுமதி பெறப்படாமலும் குவாரி இருப்பிடம் 'ஆம்பூர் வட்டம்' எனப் பதிவு செய்தும் மண் அள்ளிச் செல்லும் வண்டிகளுக்கு, அப்போதே நேரத்தின் அளவு குறிப்பிட்டு, ஏஜென்ட்கள் நடைச்சீட்டு கொடுத்தும் அனுப்பியிருக்கின்றனர்.

லஞ்சம் வாங்கிய காவல் துறை

இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர், தாசில்தாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, மண் ஓட்டுபவரைப் பற்றி 'துளி கூட எங்களுக்குத் தெரியாது; அது மேலிடத்து விவகாரம்' எனக் கூறி தட்டிக் கழித்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

அதன்பின்னர் பொதுமக்கள் திம்மாம்பேட்டை காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், மண் திருடர்களிடம் பேசி ஒரு கணிசமான தொகையைப் பெற்றுக்கொண்டு காவல் துறையினர் சென்றதாகவும் பொதுமக்கள் குறிப்பிட்டனர்.

கடத்தல் மன்னன் யார்?

அதேபோல் உள்ளூர் மண் திருடர்கள், வெளியூர் மண் திருடர்களிடம் தங்களுக்கும் கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டு, தாராளமாக மண் எடுத்துக் கொள்ளலாம் எனப் பேரம் பேசியதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இச்சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

மணல் அள்ளிய லாரியை சிறைப் பிடித்த மக்கள்

ஆனால், தற்போது வரை, மண் எடுத்துச் செல்லும் லாரி ஓட்டுநர்கள் குறித்து முழுமுதற்காரண முதலாளி யாரென்று தெரியாமல், பொதுமக்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் விழிபிதுங்கி நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்க செயின் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details