தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 20, 2020, 5:56 PM IST

ETV Bharat / state

சுடுகாட்டுக்குச் செல்ல அனுமதி மறுப்பு: சடலத்துடன் போராட்டம் நடத்திய மக்கள்!

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே சுடுகாட்டுக்குள் சடலத்தை எடுத்துச் செல்ல ஒரு பிரிவினர் அனுமதி மறுத்ததால் சடலத்தை வைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

சடலத்துடன் போராட்டம் நடத்திய மக்கள்
சடலத்துடன் போராட்டம் நடத்திய மக்கள்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த குனிச்சியூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் குமரேசன் (28). மாற்றுத்திறனாளியான இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று (ஏப்ரல் 19) உயிரிழந்தார்.

இந்நிலையில், இறந்தவரின் உடலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு உறவினர்கள் கொண்டுச் சென்றனர். ஆனால், சென்னாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன், சேகர், சசிகலா, குமார், பிரபாகரன் ஆகியோர் இந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது சடலத்தை புதைக்கக்கூடாது எனக் கூறியுள்ளனர்.

இதற்கு குனிச்சியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள், பல ஆண்டுகளாக தாங்கள் இப்பகுதியில் தான் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்துவருகிறோன் எனக் கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சடலத்துடன் போராட்டம் நடத்திய மக்கள்

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாட்றம்பள்ளி காவல் துறையினர், வருவாய்த் துறையினர் இச்சம்பவம் குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருவாய்த் துறையினரின் உத்தரவின்பேரில் அந்த இடத்தில் சடலத்தை அடக்கம் செய்தனர்.

இதையும் படிங்க: சமூக இடைவெளியுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

ABOUT THE AUTHOR

...view details