தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாழ்வாதாரமான இடத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் - அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதம் - அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதம்

நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தில் 40 ஆண்டுகளாக வசித்து வருவோரை வெளியேற்ற எதிர்ப்புத்தெரிவித்து, கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

protest
protest

By

Published : Apr 12, 2022, 10:31 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சுமார் 15 மீட்டர் இடத்தில், சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 40-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை கட்டி கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைதுறை சார்பில், அங்கு சாலை விரிவுபடுத்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கொடுக்க வேண்டும் என்று கிராம மக்களிடம் கூறியதையடுத்து, ஆக்கிரமிப்பில் இருந்த 8 மீட்டர் இடத்தை சொந்த பணத்தை செலவு செய்து கிராம மக்களே அகற்றி கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், மீதமுள்ள இடத்தையும் கைப்பற்ற அதிகாரிகள் வந்ததால், அவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீடுகள், சிறிய கடைகள் உள்ளிட்டவை உள்ளதால், தங்கள் வாழ்வாதாரமாக இருக்கும் இடத்தை விட்டுக்கொடுக்க முடியாது எனக்கூறி அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: அவதூறு வழக்கு - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details